ஈரான் - அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் முயற்சி
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கப்பாட்டு திட்டத்தை பாகிஸ்தான் தயாரித்து இரு நாடுகளுக்கும் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் இரண்டு கட்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், முதலில் உடனடி போர்நிறுத்தமும் அதைத் தொடர்ந்து ஒரு விரிவான உடன்படிக்கையும் எட்டப்படும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை உருவாக்குதல்
ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக வடிவமைக்கப்படும் என்றும், பேச்சுவார்த்தைகளின் ஒரே தகவல் தொடர்பு ஊடகமாக இருக்கும் பாகிஸ்தான் ஊடாக இது இறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும், முடக்கப்பட்ட வெளிநாட்டுச் சொத்துக்களை விடுவிப்பதற்கும் ஈடாக, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளிப்பதை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள இந்த தகவலை இருநாடுகள் ஊடாகவும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |