36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி...! அச்சத்தில் அலறும் பாகிஸ்தான்
அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாத்திற்கு “நம்பகமான உளவுத்துறை” தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் ( Pakistan) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு கடுமையான விளைவுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதாவுல்லாஹ் தரார் (Attaullah Tarar) எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் புதன்கிழமை அதிகாலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
நம்பகமான உளவுத்துறை தகவல்
மேலும் அவர் கூறுகையில், கடந்த வாரம், 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பஹல்காமில் கடந்த வாரம் நடந்த தாக்குதலை “தவறான சாக்குப்போக்காக” இந்தியா பாகிஸ்தானைத் தாக்க பயன்படுத்துவதாக அதாவுல்லாஹ் தரார் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வேதனையின் வலியை உண்மையிலேயே புரிந்துகொள்கிறது.
உலகில் எங்கும் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் நாங்கள் எப்போதும் அதைக் கண்டித்து வருகிறோம்.
உண்மையைக் கண்டறிய நடுநிலையான நிபுணர்கள் குழுவால் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை நடத்த பாகிஸ்தான் திறந்த மனதுடன் முன்வந்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கை
கடந்த 22 ஆம் திகதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக இந்தியா கூறியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்திய ஆயுதப்படைகளுக்கு "முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை" வழங்கி உள்ளதாக இந்நதிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி வழங்கி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
