விரைவில் சிறை செல்லப்போகும் முன்னாள் அமைச்சர்கள் : எச்சரிக்கும் அநுர தரப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் (Muneer Mulaffer) தெரிவித்துள்ளார்.
மன்னார் (Mannar) உப்புக்குளம் பகுதியில் நேற்று (29) இரவு நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”இன்னும் ஒரு சில தினங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற உள்ளது. தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர்.
நிறைய பேரின் கோப்புக்கள் மேலே வந்துள்ளது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மக்கள் சொத்துக்களை திருடியவர்கள், மக்களின் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியவர்கள், மக்களை அச்சுறுத்தியவர்களுக்கு நாங்கள் நிச்சயமாக அதற்கான தண்டனையை வழங்குவோம்.“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
