உச்ச கட்ட பதற்றம் : நேரம் பார்த்து காய் நகர்த்தும் பாகிஸ்தான்
இந்தியாவுக்கு (India) எதிராக உலகில் சக்திவாய்ந்த ரேடாரை காஷ்மீர் (Kashmir) எல்லைக்கு பாகிஸ்தான் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் தாக்குதல் காரணமாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா மற்றம் பாகிஸ்தான் (Pakistan) இடையே போர் முழும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பயங்கரவாத தாக்குதல்
இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.
பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் கற்பனை செய்ய முடியாத பதிலடியை இந்தியா தரும் என்று மோடி எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
அதேநேரம் தற்போது காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி வழங்கி வருகிறது.
ரேடார் சிஸ்டம்
இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் தனது ரேடார் சிஸ்டங்களை எல்லையை நோக்கி நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் TPS-77 ரோடாரை இந்திய எல்லையில் இருந்து 58 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோர் கண்டோன்மென்ட்( Chor Cantonment) ஏரியாவில் பாகிஸ்தான் நிறுவி உள்ளது.
இது உலகில் உள்ள சிறந்த ரேடார்களில் ஒன்றாகும். இந்த ரேடாரின் சிறப்பு என்னவென்றால் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை 463 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே கண்டுபிடித்து சிக்னல் கொடுக்கும்.
அதே போல் தாழ்வாக பறந்து வந்து தாக்கும் ட்ரோன், போர் விமானங்களை 150 கிலோ மீட்டருக்கு அப்பால் கண்டுபிடித்துவிடும். அதோடு தரைவழியாக தாக்குதல் நடத்தினாலும் இந்த ரேடாரால் கண்காணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
