பாகிஸ்தானில் நிலவும் கடும் வெப்பம்: 500க்கும் மேற்பட்டோர் பலி
பாகிஸ்தானில் (Pakistan) நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த 6 நாட்களில் சுமார் 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், வசிப்பதற்கு வீடுகள் இல்லாதோர் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களே அதிகளவில் இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை
பாகிஸ்தானில் வெப்பநிலை 49 முதல் 50 பாகை செல்சியஸாக அண்மை நாட்களில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வைத்தியசாலையில் கடந்த ஞாயிறு மற்றும் புதன்கிழமை வரையான காலப்பகுதிக்குள் சுமார் 267 பேர் வெப்பப் பக்கவாதத்தால் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் தற்போது உயிரிழந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர். இம்ரான் சர்வார் ஷேக் தெரிவித்துள்ளார்.
வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிபுற வேலைகளில் ஈடுபடுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |