மிரட்டியது ஐசிசி : ரி20 உலககிண்ண அணியை அறிவித்தது பாகிஸ்தான்
ரி20 உலககிண்ணப்போட்டியில் பங்கேற்கமாட்டோம் என அடம்பிடித்த பங்களாதேஷ் அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் ரி20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது.
இந்நிலையில் வங்காள தேசத்துக்கு ஆதரவாக உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்தது. முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்தது.
15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்தது
இந்நிலையில், ரி20 உலக கோப்பை தொடருக்கு சல்மான் அகா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்தது. பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2026 ரி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி வருமாறு,
சல்மான் அலி ஆகா (அணித்தலைவர்), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா முகமது நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சாஹிப்சாதா, ஷாஹிம்ஹானி ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |