அத்துமீறிய பாகிஸ்தான் : தக்க பதிலடிக்கு தயாராகும் இந்தியா : இன்றிரவு வெளியான அறிவிப்பு
போர் நிறுத்தம் செய்து கொள்வதாக அறிவித்த பின்னர் அதையும் மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு(10) ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், இரவு 11 மணிக்கு செய்தியாளர்களுடன் பேசிய இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்தால் முழுவீச்சில் தக்க பதிலடி கொடுக்க இராணுவத்துக்கு அறிவுறுத்தல்களை அரசு வழங்கியிருப்பதாக” தெரிவித்தார்.
உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்
“இத்தகைய அத்துமீறல் தாக்குதல் நடவடிக்கைகளைக் களைய பாகிஸ்தான் தீவிரத் தன்மையுடனும் முழு பொறுப்புடனும் செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்துகிறது.
இந்திய ராணுவத்தினர் இந்தச் சூழலில் மிகுந்த உன்னிப்புடன் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில், எல்லை தாண்டிய அத்துமீறல்கள் தொடர்ந்தால் முழுவீச்சில் எதிர்வினையாற்ற ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராணுவம் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
