திடீரென பதவி விலகிய பலஸ்தீன பிரதமர்
பலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து பலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம், தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பலஸ்தீன நிர்வாகத்தில் புதிய திருப்பமாக, பலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பலஸ்தீன பிரதமர்
பலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார்.
எப்போதும் இல்லாத வகையில் காசா பகுதியில் போர், இனப்படுகொலை மற்றும் பட்டினி ஆகியவற்றின் காரணமாக தாம் பதவி விலக முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததுடன் பலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் அவர்,
காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
“பலஸ்தீன அதிபர் பலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்” என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |