யாழில் இடம்பெற்ற மாகாண மட்ட ஹொக்கி போட்டிகள்: சாதனை படைத்த பண்டத்தரிப்பு பாடசாலை மாணவிகள்
மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற ஹொக்கி போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை (Pandatherippu Girls high School) அணி முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த இறுதிப் போட்டியானது யாழ்ப்பாணக் (Jaffna) கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், 20 வயதிற்கு கீழுள்ள பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஏழு பாடசாலைகளின் அணிகள் பங்கு பற்றியுள்ளன.
உயர்தரப் பாடசாலை
இந்தநிலையில், வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்திற்கும், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்குமிடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது.
அதன்படி, 2:1 என்ற எண்ணிக்கை அடிப்படையில் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தை வீழ்த்தி பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது.
மேலும், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணிக்கான பயிற்றுவிப்பாளராக செல்வி பிந்துசா பிரபாகரன் கடமை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |