புலம்பெயர் சமுகத்திற்காக வெளியிடப்பட்ட பண்டோரா ஆவணம் -அரசாங்கம் குற்றச்சாட்டு
புலம்பெயர் சமுகத்திற்குத் தேவையான வகையிலேயே பண்டோரா ஆவணம் வெளியிடப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்காவின் ஆளும் பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது. ஸ்ரீலங்கா முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச மாத்திரமன்றி ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான அமரர் ஜே.ஆர். ஜயவர்தன(J.R. Jayawardena), பிரேமதாஸ (Premadasa)ஆகியோரது காலத்திலிருந்தே மோசடிகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா அமைச்சரும் பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான சீ.பி.ரத்நாயக்க(CP Ratnayake) வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
‘பண்டோரா ஆவணம் புலம்பெயர் சமூகத்திற்குத் தேவையான வகையில்தான் வெளியிடப்பட்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவும்(Nirupama Rajapaksa) பண்டோரா ஆவணத்தில் சிக்கியுள்ளார். ராஜபக்ச(Rajapaksa) என்ற பெயரை வைத்ததால் விஜேதாஸ ராஜபக்ச(Wijethasa Rajapaksa) ஏதாவது தவறு செய்தால் அதுவும் மஹிந்த ராஜபக்சவின் கணக்கில் சேர்க்கமுடியுமா? அல்லது கோட்டாபய ராஜபக்சவின்(gotabaya rajapaksha) கணக்கில் இணைக்கமுடியுமா?உறவுமுறையும் அரசியலும் அப்பாற்பட்டதாகும். அரசியலுக்கு அனைத்தையும் இழுக்கமுடியாது.
மகாராஜா குழுமத்தலைவர் மறைந்த கிளி மகாராஜாவும்(Maharaja) நடேசனுக்கு(nadesan) உறவுதான். அப்படியென்றால் அதனை பற்றியும் சஜித் பிரேமதாஸ(sajith premadasa) பேசலாம்தானே. ஏன் மரிக்கார்(Marikkar), மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) இதுபற்றி பேசுவதில்லை? அவர்களிடமிருந்து சம்பளம் பெறுவதால்தானா?
இந்த பண்டோரா ஆவணம் பற்றி விசாரணை செய்ய ஜனாதிபதி குழு நியமித்துள்ளார். கடந்த காலத்தில் சம்பிக்க ரணவக்கவின்(champikka ranawakka) தனிப்பட்ட செயலாளரது பணம் இரகசிய முதலீடுகள் பற்றிய தகவல்கள் கசிந்தன. இன்று அவர்கள் தரப்பினர்தான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறையிடுகின்றனர்.
அவர்களது தாய் அம்மா என்றாலும் எமது தாய் சும்மாவா? சம்பிக்க ரணவக்கவின் தனிப்பட்ட செயலாளர் பெருந்தொகைப் பணம் வைப்பில் வைத்திருந்தார்.
ஜே.ஆர் ஜயவர்தன, பிரேமதாஸவின் காலத்தில் பெற்ற பணம்பற்றியும் விசாரணை செய்யுங்கள். இந்த விடயத்தில் திசைதிருப்ப வேண்டாம். நாடாளுமன்றத்தில் வந்து சர்வதேசத்திற்காக சிலர் பேசுகின்றனர்.
ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen)சிறையிலிருக்கும்போது போத்தலில்தான் சிறுநீர் கழிப்பதாகவும் முறையான வசதி அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் சொல்கின்றார்கள். அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.