“பண்டோரா ஆவணங்கள்” தொடர்பான விசாரணை தொடர்பில் கோட்டாபயவிடம் சென்ற அறிவிப்பு
Colombo
Economy
SriLanka
Pandora Papers
Gotabaya Gajapaksa
By Chanakyan
பண்டோரா ஆவணங்கள் (Pandora Papers) சம்பந்தமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆரம்பித்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Gajapaksa) அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டோரா ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் அவற்றின் கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நடத்தி, ஒரு மாதத்திற்குள் அறிக்கையை வழங்குமாறு அரச தலைவர், ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்தார்.
அரச தலைவரின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹனதீரகடந்த ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, அரச தலைவரின் உத்தரவை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,