காலி பூசா சிறைச்சாலைக்குள் வீழ்ந்த மர்ம பார்சல்
காலி (Galle) பூசா சிறைச்சாலைக்குள் வீழ்ந்த மர்ம பார்சல் ஒன்றினுள் இருந்து தொலைபேசிகள் உள்ளிட்ட பெரும்தொகை உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூசா அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக மர்ம பார்சல் ஒன்று சிறைச்சாலை வளாகத்துக்குள் வீழ்ந்ததை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கண்டுள்ளனர்.
இதையடுத்து, சிறைச்சாலை பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினரிடம் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மர்ம பார்சல் கைப்பற்றப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த பார்சலுக்குள் இருந்து நான்கு தொலைபேசிகள், ஒரு சிம் அட்டை, மேற்புற கவர் நீக்கப்பட்ட சார்ஜர்கள் பத்து, ஏழு டேட்டா கேபிள்கள், ஏழு ஹேண்ட்ப்ரீ கருவிகள் மற்றும் ஏழு புகையிலை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்பின்பு, குறித்த பார்சலை தமது பொறுப்பில் எடுத்துள்ள விசேட அதிரடிப்படையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
