மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்மப் பொதி! சந்தேகநபர் கைது
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Department of Prisons Sri Lanka
By Dhilak
கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய போதியை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பொதியில் 30 மறு மின்னேற்ற மின்கலங்கள், 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சிறைச்சாலையின் சுவருக்கு மேல் பொதி வீசப்பட்ட பின்னர், குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதன்படி, சம்பவம் தொடர்பாக சஹாஸ்புர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்