தாம் பெற்ற பிள்ளையை கைவிட்டு தப்பிச் சென்ற பெற்றோர்
மட்டக்களப்பு - வாகரை பிதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று தாம் பெற்ற ஐந்தரை மாத சிசுவை கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையிலேயே இந்த தம்பதி மேற்கண்ட செயலை செய்துள்ளது.
குழந்தையை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்துவிடுமாறு
இந்த இளம் ஜோடி, ஒரு வாரத்திற்கு முன்னர், மற்றுமொரு பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். அங்கிருந்து இரகசியமான முறையில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தம்பதி மற்றுமொரு நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, தாங்கள் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதாகவும், கைக்குழந்தை தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருப்பதாகவும், அதனை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பேராதனை வைத்தியசாலையில் குழந்தை
இது தொடர்பில், காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிசுவை மீட்ட அவர்கள், அச்சிசுவை கலஹா வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்றனர். அங்கு தாய்பால் ஊட்டுவதற்கு வசதிகள் இன்மையால், பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        