போதைப்பொருள் வாங்குவதற்காக பெற்றோர் செய்த இழிவான செயல்
இந்தியாவின் - மும்பையில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைகளை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த ஷபீர் மற்றும் சானியா கான் என்ற தம்பதியர் இருவரும் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர்.
அவர்களுடைய ஆண் குழந்தையை 60 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் வழக்கு
குறித்த சம்பவத்தினை தம்பதியினரின் குடும்பத்தினர் அறிந்தவுடன், கதை வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் மற்றும் இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஷபீர்கான், அவரது மனைவி சானியா, உஷா ரத்தோர், ஷகீல் மக்ரானி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாவீரர் தினத்திற்கான தயார் நிலையில் தாயகம்! குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டில் தென்னிலங்கை நிறுவனம்
போதைப்பொருளுக்கு அடிமை
இதுகுறித்து குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
”அவர்களால் போதைப்பொருள் இல்லாமல் வாழ முடியாததனால் தம்பதியினர் தங்கள் மகனை 60 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நபருக்கு விற்றனர்.
இந்த தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையை, குற்றம் சாட்டப்பட்ட ஷகீல் மக்ரானிக்கு கடந்த மாதம்14 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
ஆண் குழந்தை யாருக்கு விற்கப்பட்டது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |