பிரான்ஸில் அதிகாலைவேளை பயங்கரம் : ஈபிள் கோபுரம் அருகே கத்திகுத்து தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லைச் சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
26 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்தாரி அரபு மொழியில் ‘அல்லாஹு அக்பர்’ என்று கத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முஸ்லிம்கள் உயிரிழப்பால் மன உளைச்சல்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் பல முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
சந்தேகநபருக்கு 2016 இல் மற்றொரு தாக்குதலுக்கு சதி செய்ததற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அவர் பிரெஞ்சு பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |