ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு பணப்பரிசு! மேற்கொள்ளப்பட்ட புதிய தீர்மானம்
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு பரிசுத் தொகையை வழங்க உலக தடகள விளையாட்டு அமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுத்தொகையை வழங்கும் முதல் சர்வதேச கூட்டமைப்பாக உலக தடகள விளையாட்டு மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண பரிசுத்தொகை
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு பண பரிசுத்தொகைகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, பாரிஸில் நடைபெறும் 48 தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 ஆயிரம் டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்
இதேவேளை, லொஸ் ஏஞ்சல்ஸில் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்த நடவடிக்கை விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதிலும் எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |