ஒலிம்பிக் பதக்கத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம்...! வெளியான வடிவமைப்பால் ஆச்சரியத்தில் மக்கள்
France
Paris
Paris 2024 Summer Olympics
Gold Medal
By Kathirpriya
பிரான்ஸ் இல் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (08) விழா ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட இந்தப் பதக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் அம்சம் இடம்பெற்றிருப்பது சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.
ஈபிள் கோபுரம்
அதன்படி, அந்த பதக்கங்கள் மையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அறுகோண வடிவ இரும்புத் துண்டானது அசல் ஈபிள் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு (2024) பாரிசில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் ஒவ்வொரு விடயங்களும் பார்த்து பார்த்து செய்யப்பட்டு வருகிற நிலையில், ஈபிள் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட இரும்பு பதக்கத்தில் பயன்படுத்தப்படுவது மேலும் சிறப்பான விடயமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி