சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்!
srilanka
parliament
ranjan ramanayake
By Vasanth
வெற்றிடமாகவிருந்த ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்புவாக்குப் பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்திருந்த அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டார்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் மான்னப்பெரும இன்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்