நாட்டை உடனடியாக முடக்கினால் சிக்கல் உருவாகும் - அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
உடனடியாக நாட்டினை முடக்குமாறு எதிர்க்கட்சியின் கூறுகின்றனர். நாட்டினை முடக்கினால் தான் பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்று அமைச்சர் ரேஹித்த அபேகுணவர்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
உடனடியாக நாட்டினை முடக்குமாறு எதிர்க்கட்சியின் கூறுகின்றனர். நாட்டினை முடக்கினால் தான் பிரச்சினைகள் தோற்றம் பெறும். கூலித் தொழிலாளர்களுக்கு வாழ முடியாத நிலை ஏற்படும்.
தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களுக்கு கொழுந்து பறிக்க முடியாத நிலை ஏற்படும். றப்பர் வெட்டுபவருக்கு தொழில் இல்லாது போகும். இந்த சாவல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் போது என்ன நடக்கும்? சாப்பிடுவதற்கு உணவற்ற நிலை ஏற்படும்.
பொருளாதார ரீதியில் பிரச்சினை ஏற்படும். அப்போது தான் நாட்டிற்குள் பிரச்சினை ஏற்பட்டு உணவினை வழங்குமாறு மக்கள் வீதிக்கு இறங்க ஆரம்பிப்பார்கள். அந்த சந்தர்ப்பத்தில்தான் எதிர்க் கட்சியினருக்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகும். எதிர்க்கட்சியினர் நிலையான அரசாங்கத்திற்கு விரும்பவில்லை என்றார்.