19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்
Sri Lanka Parliament
Sri Lanka Politician
By Kiruththikan
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்றம் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
சிறிலங்கா பதில் அதிபராக பதவியேற்ற பின் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட முதலாவது நாடாளுமன்றம் இதுவாகும்.
நாடாளுமன்றம்
நாட்டில் இடம்பெற்று வரும் பாரிய அரசியல் மாற்றங்களுக்கு இடையில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலமையில் நாடாளுமன்றம் கூடுகின்றது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் அவர்கள் வருகைதர சந்தர்ப்பம் அளிக்குமாறு, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்றைய தினம் இலங்கையர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்று நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 10 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி