கோட்டாபயவின் பதவி விலகல்: நாளை கூடவுள்ள நாடளுமன்றம்! வெளியான அறிவிப்பு
By Kiruththikan
நாடாளுமன்றம்
கோட்டாபயவின் பதவி விலகலை தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபயவின் பதவி விலகலை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பதற்காக நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா அதிபரின் பதவி விலகலை சற்று முன்னர் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்