ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் சுட்டிக்காட்டி உரையாற்றிய முஜிபுர்- வெளியேறிய உறுப்பினர்!
நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றும் போது ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வெளியேறிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன 2015 ஆம் ஆண்டு பொருளாதாரம் சம்பந்தமாக எழுதிய நூல் ஒன்றை மேற்கோள்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தனது உரையை ஆரம்பித்திருந்தார்.
அதன்போது, பந்துல குணவர்தன அவையில் இருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பந்துல குணவர்தன அன்று வெளியிட்ட நூலில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக பொது மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படும் விதத்தை விபரித்துள்ளதாகவும் அது தற்போது சரியாக பொருந்துவதாகவும் முஜிபுர் தெரிவித்தார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் பந்துல குணவர்தன அன்று பொருளாதாரத்தை விபரித்தது போல், தற்போது விபரிப்பதில்லை. அதற்கு பதிலாக புதுவிதமான பொருளாதார விஞ்ஞானத்தை அவர் தற்போது கூறுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.