எதிர்க்கட்சித் தலைவரின் அரசியல் ஒழுக்கம் குறித்து விமர்சனம் - சபையில் கடும் வாக்குவாதம்
எதிர்க்கட்சித் தலைவரின் அரசியல் ஒழுக்கம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன முன்வைத்த விமர்சனத்தினால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த அரசாங்கத்தில் மத்திய கலாசார நிதியத்தின் நிதி பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக இன்று(29) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாத்தின்போதே சஞ்சீவ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், “எதிர்க்கட்சியினர் உரையாற்றும்போது, மற்றையவர்களை ஊழல்வாதிகள் எனக் குறிப்பிடுகின்றனர்.
குறுக்கிட்ட லக்ஸ்மன்
கடந்த 2019 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் அதிபர் தேர்தலை அண்மிக்கும் வரை, மத்திய கலாசார நிதியத்திலிருந்து மோசடியாக நிதி பெறப்பட்டுள்ளமை, குறித்த கணக்காய்வு அறிக்கையில் புலப்படுகிறது. அவ்வாறு குறித்த வருடத்தில் 2005 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.”என கூறியிருந்தார்
இதன்போது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, குறித்த உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரின் நடத்தைகளை விமர்சித்துள்ளார்.
மேலும், நிலையியற் கட்டளைக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நடத்தையை சபையினுள் விமர்சிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டார்.
சபையிலிருந்து வெளிநடப்பு
இதன்போது, குறிக்கிட்ட ஆளும்கட்சியினர் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த விடயத்தை குறித்த உறுப்பினர் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தனர்.
இதன்போது, சபையில் சலசலப்பு ஏற்பட்டது. லக்ஷ்மன் கிரியெல்ல தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டதுடன், சபையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.
எவ்வாறாயினும், தான் எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட நடத்தையை விமர்சிக்கவில்லை என்றும் அவரது அரசியல் செயற்பாடுகளையே விமர்சித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)