இன்று மின்வெட்டு ஏற்படவுள்ள நேரங்கள் : வெளியான நேர அட்டவணை
நாடளாவிய ரீதியில் இன்று (13.02.2025) 1 மணித்தியாலயம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை (CEB) வெளியிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் சுழற்சியில் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 1 மணித்தியாலம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
மின்வெட்டு நேரங்கள்
இதன்படி, I,J,K,L ஆகிய வலயங்களில் மாலை 5 மணி முதல் 5.30க்குள் மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு 6 மணி முதல் 6.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.
R,S,T,W,U,V ஆகிய வலயங்களில் மாலை 6 மணி முதல் 6.30க்குள் மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு மாலை 7 மணி முதல் 7.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
A,B,C,D,P,Q ஆகிய வலயங்களில் மாலை 7 மணி முதல் 7.30 முதல் வரை மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு இரவு 8 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.
E,F,G,H ஆகிய வலயங்களில் இரவு 8 மணி முதல் 8.30 வரை மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு இரவு 9 முதல் 9.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/4aad6ddb-8f4b-48ad-94a9-6b71420a5777/25-67ad8191b77f1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e71d34cf-ef30-47cc-9c47-d6612c3a4561/25-67ad81b775801.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e10f9ff3-9e1d-43ca-91bf-ec8083bab5a8/25-67ad81cb2f78a.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)