நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்: சபாநாயகர் அதிரடி அறிவிப்பு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற சேவை காலத்தை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றில் கேள்வியொன்றை எழுப்ப முயன்ற போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையாக கூச்சலிட்டு அதற்கு இடையூறு விளைவித்தனர்.
மேலும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடத்தில் இருந்து எழுந்துச் சென்று எதிர்க்கட்சி தலைவருடன் முரண்படும் வகையில் செயற்பட்டார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டதாக தெரிவித்தே, சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற சேவையை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
