பிரமிட் திட்டம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை - தடை செய்யப்பட்ட 09 நிறுவனங்கள்
பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது இயங்கி வரும் மற்றும் தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தண்டனைக்குரிய குற்றம்

மேலும் இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கி குறிப்பிடுகையில், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகிற, விளம்பரப்படுத்துகிற, நடத்துகிற, அல்லது நிர்வகிக்கிற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவராக கருதப்படுவர்.
சில பிரமிட் திட்டங்களை நடத்தும் சில நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சமூகத்தின் சில பிரிவினர் முன்வைக்கும் கூற்றுக்களை வன்மையாக நிராகரிகிறோம்.
இவ்வாறான நியமிக்கப்பட்ட பிரமிட் திட்டங்களுக்கு வங்கிச் சட்டத்தின் 83 டி பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை மாற்றுவது சாத்தியம் என்பதால், இந்த விடயத்தை பரிசீலிக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கு அறிவித்தல்
இந்த நிலையில், பிரமிட் திட்டம் உள்ளிட்ட நிதியியல் மோசடிகளை ஊக்குவிக்கும் 09 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி தடை செய்ய தீர்மானித்துள்ளது.
இதற்கமைய மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஒரு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.