வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள் இனி சட்டபூர்வமாக்கப்படும் - நிறைவேறியது சட்டமூலம்
sri lanka
people
parliament
By Shalini
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்கு அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (07) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை நேற்றைய தினம் அவசரகால சட்ட விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.