பசறையில் இடம்பெற்ற கோரவிபத்து -அநாதைகளான மூன்று குழந்தைகளையும் தத்தெடுக்க முன்வந்துள்ள மருத்துவர்
srilanka
accident
passara
By Vasanth
பசறையில் இடம்பெற்ற கோரவிபத்தில் தம்பதியர் உயிரிழந்த நிலையில் அவர்களது மூன்று சிறிய இளம் பிஞ்சுகளும் அநாதைகளாகினர். இந்த மூன்று குழந்தைகளும் தமது தாய் தந்தையை இழந்து லுணுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்த நிலையில் அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார்.
அம்பாறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வஜிர ராஜபக்ஷ என்ற மருத்துவரே அவராவார். மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறி அவர்களை தத்தெடுக்க பசறை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, டாக்டர் வஜிர ராஜபக்ஷவின் கோரிக்கை குறித்து பசறை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.