15 பேரை பலியெடுத்த பசறை விபத்து! இராஜாங்க அமைச்சர் கொடுத்த உத்தரவு

srilanka accident badulla passara
By Vasanth Mar 21, 2021 04:06 PM GMT
Report

பதுளை - பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் 15பேரின் மரணத்திற்கு காரணமான விபத்து தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு வாகன கட்டுப்பாடு, பேருந்து போக்குவரத்து சேவை, தொடருந்து பெட்டிகள், மோட்டார் வாகன கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நேற்றைய நாளில், விபத்து இடம்பெற்ற பகுதியில் உள்ள வீதியில், வீழ்ந்த நிலையில், நீண்ட காலமாக அகற்றப்படாமலிருக்கும் பாறையை அகற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், குறித்த பாறையை அகற்றுவதற்கு, வீதியை அபிவிருத்தி செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், நீண்ட காலமாக குறித்த வீதியில், வீழ்ந்து கிடக்கின்ற பாறையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். இதேநேரம், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமும், வரும் நாட்களில் இது குறித்து விசாரிக்க உள்ளதாக, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் குறித்து, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, ஏதாவது ஓரிடத்தில் வீதி ஒன்று சேதமடைந்து இருக்குமாயின், அந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறின்றேல், குறித்த வீதியை புனரமைக்கும் பணிகளை பொறுப்பேற்றுள்ள தரப்பினர், அந்த இடத்தில் அபாயம் உள்ளமைக்கான சமிக்ஞைகளை காட்சிப்படுத்த வேண்டும். அது குறித்தும், விசாரணை மேற்கொள்ள பொலிஸாருக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016