பயணிகள் பேருந்துகளில் பொருத்தப்படவுள்ள சிசிரிவி கமரா
Sri Lanka Police
Crime
By Jaso
பயணிகள் பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதை கட்டாயமாக்க எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு பேருந்துகளில் சிசிரிவி கமராக்களை பொருத்துவதன்மூலம் பேருந்துக்குள் இடம்பெறும் திருட்டுக்களை இலகுவாக கண்டுபிடிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் விசாரணை
இதன்மூலம் காவல்துறையினரின் விசாரணைகளும் எளிதாக்கப்படுமென பலரும் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் யுவதிகள் மீதான அங்க சேஷ்டை
அதேபோன்று பெண்கள் மற்றும் யுவதிகள் மீதான அங்க சேஷ்டைகளும் கட்டுப்படுத்தப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

