மண்ணெண்ணெய்யில் ஓடும் பேருந்துகள் : காவல்துறையினர் திடீர் ஆய்வு
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Srilanka Bus
By Sumithiran
வடமத்திய மாகாணத்தில் பெரும்பாலான பொது பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மண்ணெண்ணெய்யில் இயங்குவதாக வந்த முறைப்பாட்டின் பேரில், வடமத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவசர ஆய்வு நடத்தினர்.
அந்த பேருந்துகளில் 95% மண்ணெண்ணெய்யில் இயங்குவது தெரியவந்தது.
பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கை
அந்த நேரத்தில், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களின் சாலை அனுமதிகளை இரத்து செய்வது உட்பட எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
