பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பிவைப்பு
Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
By Raghav
படலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (President Media Division) அறிவித்துள்ளது.
"பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சட்டமா அதிபர்
இந்த அறிக்கை இன்று ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
25 வருடங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாகவே குறித்த அறிக்கை இன்று (29.04.2025) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்