போதைப்பொருளை விற்பனை செய்த நபர் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபருக்கு கொழும்பு ( Colombo) மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
37 வயதான குறித்த நபருக்கு நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஹெரோயின் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
ஆயுள் தண்டனை
அதன் பின்னர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரால் இந்த குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக அரசத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
