கைது செய்யப்பட்ட இ.போ.ச முன்னாள் பிரதித்தலைவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
CID - Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Raghav
குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் (Sri Lanka Transport Board) முன்னாள் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (29.04.2025) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்