வெளிநாடொன்றுக்கு பறக்க உள்ள ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வரை வியட்நாமிற்கான (Vietnam) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மே மாதம் 3 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை குறித்த விஜயம் இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் சர்வதேச வெசாக் தினத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், இதன்போது பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்திடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
குறித்த உடன்படிக்கைகள் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அந்தவகையில், இலங்கையின் பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் வியட்நாமின் இராஜதந்திர சர்வதேச விஞ்ஞான நிறுவகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இலங்கை கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வியட்நாம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான இயந்திர உப கரணங்கள் தயாரிப்புக்கான ஒத்துழைப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்.
விவசாய துறையின் ஒத்துழைப்பு
வியட்நாம் வர்த்தக மேம்படுத்தல் நிறுவனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுதல்.
விவசாய துறையின் ஒத்துழைப்புக்கான இலங்கை விவசாய திணைக்களம் மற்றும் வியட்நாம் விவசாய விஞ்ஞான கலாசாலை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுதல்.” என்பவையாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
