பயத்தின் உச்சத்தில் நாமல் :முகபாவனையை கவனிக்குமாறு வலியுறுத்து
ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உச்ச பயத்தில் இருப்பதாகவும் எனவே அவரது முகபாவனையை கவனிக்குமாமறும் கால்நடை துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
"அவரது உரையின் போது, கமரா அவரைக் காட்டும் போது, அவர் வியர்த்துக் கொண்டிருப்பதையும், அவரது கண்களில் பயம் வெளிப்படுவதையும் நீங்கள் காணலாம். அந்த முகபாவங்கள் இருந்தபோதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தான் பயப்படவில்லை என்று தெரிவிக்கிறார்," என்று கருணாரத்ன ஒரு நிகழ்வில் உரையாற்றுகையில் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல்
சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக பல பிரச்சினைகள் வெளிப்படுவதாக துணை அமைச்சர் மேலும் கூறினார்.
"இந்த நாடு போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து முன்னேறினால், நமது குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.
முன்னாள் காவல்துறை மா அதிபரின் பதவிக் காலத்தில் நிகழ்ந்த கைதுகள்
முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவரின் பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் பல சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"அந்த நேரத்தில், போதைப்பொருட்களைப் பார்த்திராத அல்லது பயன்படுத்தாத இளைஞர்கள் கூட நியாயமற்ற முறையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்," என்று கருணாரத்ன மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
