பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Sri Lanka Army Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Erimalai Aug 28, 2026 05:25 PM GMT
Report

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகளை கடந்து சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

பருத்தித்துறை நகரசபையின் 15 ஆவது அமர்வு இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் அமர்வில் நகரசபை செயலாளர் சந்திரசேகரம் பிரசாத் மற்றும் உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA

சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA

முழுமையான ஆதரவு

இதன் பின்னராக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் நகரபிதா பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார். இதன்போது NPP கட்சி தவிர்ந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தன.

பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Pedro Mayor Calls For Participation In Protest

இது தொடர்பில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது நகரத்தின் புராதன சின்னங்கள்/இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ளது.

பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும் இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும், வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றென்.” என்றார்.

இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இப்போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேற்சை(ஊசி) குழு ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 5.7% வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 5.7% வீழ்ச்சி

கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்

கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026