கொழும்பில் அதிகரிக்கும் எலிகளின் பெருக்கம்...! மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அன்றாட மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எலித் தொல்லைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எலிகள் மூலம் ரேபிஸ் (Rabies) , எலிக்காய்ச்சல் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் கொழும்புக்கு வரும் மக்களின் சுகாதாரத்திற்கும் இது அச்சுறுத்தலாக இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எலிகளின் எண்ணிக்கை
கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகரின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உணவாகக் உட்கொள்ளும் எலிகள், தற்போது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அஞ்சப்படுகின்றது.

மேலும், பல்வேறு இடங்களில் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ளும் எலிகளால் கட்டிடங்கள், சொத்துக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் சேதமடைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எலித் தொல்லையை கட்டுப்படுத்த குப்பைகளை முறையாக அகற்றுதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் வடிகால் அமைப்புகளை சுத்தமாகப் பராமரித்தல் அவசியம் என வலியுருத்தப்பட்டுள்ளது.
இதற்காக கொழும்பு நகர அதிகாரிகளுடன், நகரில் வசிக்கும் மக்களும் கொழும்புக்கு வருகை தரும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டியது சமமான பொறுப்பாகும் என வலியுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |