சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி

Port of Colombo Sri Lanka Ports Authority
By Dharu Aug 28, 2026 11:29 AM GMT
Report

சர்வதேச துறைமுக வரிசையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொள்கலன் கையாளுதலில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய Alphaliner புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுக்கு ஆண்டு 11.9 சதவிகித அதிகரிப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுகம் உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் கொழும்பு துறைமுகம் மொத்தம் 4,444,034 TEUs கொள்கலன்களை கையாண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்கட்சிகள்...! அம்பலப்படுத்திய அமைச்சர்

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்கட்சிகள்...! அம்பலப்படுத்திய அமைச்சர்

TEUs அதிகரிப்பு 

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 3,972,053 TEUs ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓராண்டுக்குள் 471,981 TEUs அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், இது 11.9 சதவீத வளர்ச்சியாகும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி | Colombo Port Growth In Rankings

இந்த வளர்ச்சியின் காரணமாக, 2025ஆம் ஆண்டு இறுதியில் உலகளவில் 26வது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களிடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்த துறைமுகங்களில் கொழும்பு துறைமுகமும் ஒன்றாக தற்போது மாறியுள்ளது.

2025ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகம் சுமார் 8.3 மில்லியன் TEUs கொள்கலன்களை கையாண்டு சாதனை படைத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டும் துறைமுகத்தின் வளர்ச்சி வேகம் நீடித்து வருவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள அரச மருந்தாளர் சங்கம்!

வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள அரச மருந்தாளர் சங்கம்!

மொத்த கொள்கலன் கையாளுதல்

இந்த வளர்ச்சி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கொழும்பு துறைமுகத்தின் முக்கியமான மாற்றுக் கப்பல் போக்குவரத்து மையம் (Transshipment Hub) என்ற நிலையை மேலும் வலுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி | Colombo Port Growth In Rankings

கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் கையாளுதலில் பெரும்பகுதி மாற்றுக் கப்பல் போக்குவரத்து மூலம் இடம்பெறுகிறது.

கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் சர்வதேச பிரதான கப்பல் மற்றும் ஊட்டுக் கப்பல் வலையமைப்புகளுக்கு இடையிலான முக்கிய இணைப்பாக கொழும்பு துறைமுகம் செயல்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026