வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள அரச மருந்தாளர் சங்கம்!

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Strike Sri Lanka
By Sathangani Aug 28, 2026 11:00 AM GMT
Report

மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து அரச மருந்தாளர் சங்கம் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 8.00 மணி முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

2026 ஓகஸ்ட் 29 ஆம் திகதியை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரச் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் மருந்தாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளின் பெயர் "மேலதிக நேர கொடுப்பனவுகள்" எனத் திருத்தப்பட்டிருந்தது.

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

 

சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

அதன்பின்னர், ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல், மருத்துவச் சேவையின் தலையீடு காரணமாக அச்சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள அரச மருந்தாளர் சங்கம்! | Govt Pharmacists To Launch Trade Union Action

எனினும், இதுவரை இப்பிரச்சினைகளுக்கு அதிகாரிகளால் திருப்திகரமான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் குறித்த சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரியும், அதற்கு அழுத்தம் கொடுத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மானிதாபிமானக் காரணங்களைக் கருத்திற் கொண்டு அனைத்து மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் மனநல வைத்தியசாலைகள் இந்த வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்களிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யாழில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

யாழில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

 அரச மருந்தாளர் சங்கம்

ஏனைய அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் முதன்மை மருந்தாளர்களைத் தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள அரச மருந்தாளர் சங்கம்! | Govt Pharmacists To Launch Trade Union Action

அத்துடன், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள IMF பிரதிநிதிகள் குழு!

அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள IMF பிரதிநிதிகள் குழு!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026