கிராமமே அழிந்து போகும் - பருத்தித்துறையில் இருந்து அநுரக்கு பறந்த கோரிக்கை
பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் உள்ளதாக சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பருத்தித்துறை - சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் இன்று (15) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம், பதிலாக கரையோரங்களில் உள்ள அணைகளை அமைத்துத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது
1000 கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2018ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாட பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது, மீண்டும் இந்திய அரசு முனைகிறது.
அருகில் உள்ள கடற்றொழிலாளர் கிராமங்களுடன் கலந்துரையாடவில்லை, தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துறைமுகம் எமக்கு வேண்டாம்
இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம் இத்துறைமுகம் எமக்கு வேண்டாம். அநுர அரசே தேர்தல்களின் போது கடற்றொழிலாளர்கள் பக்கமே நாம் இருப்போம் வடக்கு கடற்றொழிலாளர்களை பாதுகாப்போம் என்று கூறினீர்களே இப்போ என்னாச்சு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடக சந்திப்புக்கு முன்னதாக சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ், பருத்தித்துறை பிரதேச செயலாளரையும் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
