அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் மக்கள் - ஒத்துக்கொண்டது ஆளும் தரப்பு
goverment
people
Jagath Kumara
Frustration
By Sumithiran
அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதால் மாகாண சபை தேர்தலை இந்த நேரத்தில் நடத்த வேண்டாம் எனஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார(Jagath Kumara) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
" அரசாங்கம் மீது மக்கள் விரக்தியிலும் குழப்பத்திலும் உள்ளனர். எனவே இந்த நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது.அரசாங்கம் எடுத்த முடிவுகளை மக்கள் உணர்ந்து கொள்ள இன்னும் ஏழு முதல் எட்டு மாதங்கள் ஆகும், அரசாங்கம் எடுத்த முடிவுகளுக்கு மக்கள் உடன்படுவார்கள் என்று நினைக்கிறேன்".
எனவே அந்த நேரத்தில் தேர்தலை நடத்தி நாம் வெற்றி பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.