தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதிக பயணக்கட்டணம்..! மக்கள் விசனம்
பயணகட்டணகள்
தனியார் பேரூந்துகளில் பயணகட்டணகள் அதிகமாக வசூலிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ் மாவட்டதிற்குட்பட்ட தனியார் பேருந்துகளில் இவ்வாறு கட்டுப்பாடின்றி நபர்களுக்கு ஏற்ப ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடுகாரணமாக தனியார் பேருந்து கட்டணங்களும் அதிகரித்திருந்தன ஆனாலும் அதற்க்கும் அதிகமாக வசூலிக்கப்படுவாதாக பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
காட்சிப்படுத்தப்படாத கட்டண விபரம்
பேரூந்துகள் நிரம்பிவழிகின்றன அதையும் பொறுத்துக்கொண்டு பயணிக்கின்றனர் அதேநேரம் கட்டணச்சுமையும் துரத்துகின்றது
வெளிமாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகளில் பயணப்பற்றுச்சீட்டு பெரும்பாலும் வழங்கப்படுகிறது. ஆனால் மாவட்டத்திற்க்கு இடையில் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இடையிடையே பற்றுச்சீட்டு நடைமுறைக்கு வரும், வந்த சிலநாளில் காணாமல் போய்விடும் ஆகக்குறைந்து முன்பு கட்டணவிபரங்களை காட்சிப்படுத்தினர் தற்பொழுது அதுவும் இல்லை!
பாவனையாளர் பாதுகாப்பு சட்டங்கள் பெருந்தொற்று மற்றும் இவ்வாறான நெருக்கடி காலங்களில் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன!
நுகர்வோர் அதிகாரசபையினால் வழங்கப்படாத விலைப்பட்டியல்
அத்தியாவசிய பொருட்கள் விலைகட்டுப்பாடு தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையினர் ஆங்காங்கே ஒரு சில கடைகளை பார்வையிடுவது வழக்கிடுவதோடு நின்றுவிடுகின்றனர் பெரும்பாலும் சாமானியர்கள் அதிக விலைகொடுத்தே பொருட்களை உள்ளூர்களில் வாங்குகின்றனர், இது போக்குவரத்துக்கும் பொருந்துகிறது.
இந்த விடையம் தொடர்பில் யாழ்.மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் திரு. கெங்காதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது நுகர்வோர் அதிகாரசபையினால் இன்னமும் விலைப்பட்டியல் வழங்கப்படவில்லை எனவும் பயணக்கட்டன விபரங்களை கூடிய விரைவில் மாவட்டதுக்குட்பட்ட அனைத்து தனியார் பேரூந்துகளிலும் காட்சிப்படுத்த ஆவணசெய்வதாக குறிப்பிட்டார்.
அதே நேரம் அண்மையில் டீசல் விலை பத்து ரூபா குறைக்கப்பட்டதை அடுத்து இலங்கை அரச போக்குவரத்து சபை போக்குவரத்து கட்டணங்களை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.