இலங்கையர்களிடம் சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை (காணொளி)
கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிக உயர்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் போது மக்கள் தங்களின் உயரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள விக்கிரமாரச்சி கண் மருத்துவ நிலையத்துடன் இணைந்த சீஹிஸ் விஷன் நிலையத்தை ( ZEISS VISION CENTER) திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்தும் முடிந்தவரை முன்னெடுப்போம்.
இதுவரை வெற்றிகரமாக தடுப்பூசிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டும்.
கொரோனா கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும். மக்கள் அதற்கு எதிர்மறையாக நடந்துகொண்டால், மீண்டும் பயணக் கட்டுப்பாடு போன்றதொரு சூழலை எதிர்கொள்ள நேரிடலாம்” என அவர் கூறியுள்ளார்.