யாழ்.மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
யாழ்ப்பாணத்தில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இது வரையில் 160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
யாழில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
எனினும் யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம் மேலும் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மேலும் யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில் சந்தை விடயம் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.