நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள்!
curfew
colombo
people
By Vasanth
நாளை அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவேவ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொரள்ளை காவல்துறை அதிகாரத்திற்குட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிாிவு, மிாிஹானை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.
இதேவேளை பேலியகொடவத்தை, மீகஹவத்தை கிராம சேவகர் பிாிவு, ரோஹன விஹார மாவத்தை, நள்ளிகஹவத்தை, பூரணகொட்டுவத்தை ஆகிய பகுதிகளும் நாளை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி