ஜெர்மனி தலைநகரில் திடீரென வெளியேற்றப்பட்ட மக்கள்! கண்முன் வந்து சென்ற உலகப்போர் சம்பவம்
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.
புதன்கிழமை காலை Spandau பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகையில், தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும்போது சுமார் 100 கிலோ எடையுடைய ரஷ்ய தயாரிப்பு வெடிகுண்டை கண்டுபிடித்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 12,400 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மற்றொரு குண்டு
அத்தோடு, பெர்லினை ஒட்டியுள்ள Spree நதியில் இரண்டாம் உலகப்போரின் காலத்தைய மற்றொரு குண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, Fischerinsel அருகில் வசிக்கும் சுமார் 10,000 பேர் நேற்று இரவு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஆனால் ஆய்வுகளின் பின்னர், அந்த நதியில் இருந்த குண்டு உடனடி வெடிப்பு அபாயமில்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், இன்று காலை மக்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
மக்களின் வெளியேற்றம்
அதன்படி, குண்டை நதியிலிருந்து அகற்றி, பாதுகாப்பான இடத்தில் செயலிழக்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மாறாக, Spandau பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதற்கான பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஜெர்மனியில் இதுபோன்ற குண்டுகள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் பெர்லினில் இத்தனை அதிகமான மக்களை வெளியேற்ற வேண்டிய நிலை பல ஆண்டுகளுக்குப் பிறகே ஏற்பட்டுள்ளதால், நகர மக்கள் நீண்ட நேரம் பதட்டத்துடன் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
