ஈரானிலிருந்து ஆப்கானுக்கு தப்பிச் செல்லும் மக்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக ஈரானில் இருந்து ஆப்கானுக்கு மக்கள் தப்பிச் செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மோதல் தொடங்கியதிலிருந்து ஈரானில் இருந்து 25,000 க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் இடப்பெயர்வு
இதேவேளை தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) தெரிவித்துள்ளது.

imaje credit aljazeera
அவர்களில் பெரும்பாலானோர் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் என்று ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மோதல் சூழ்நிலை தொடரும் போது இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |