புத்தாண்டு விடியலில் கூட வரிசையில் நிற்கும் மக்கள் - அரசின் செயற்பாட்டால் கடும் விமர்சனம்
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாடுகளினால் புத்தாண்டின் விடியலில் கூட எரிவாயு மற்றும் பால் மாவுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardena) தெரிவித்துள்ளார்.
புத்தாண்டைக் கொண்டாடுவது ஒருபுறமிருக்க, குழந்தைகளின் தேவைக்காக அடுப்புப் பற்றவைக்க இந்நாட்டு மக்கள் வரிசையில் நிற்பது வேதனையளிக்கும் காட்சி என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கொழும்பு ஹைட் பார்க் கோனரில் உள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
விஜேவர்தனவின் கொழும்பு அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ருவான் விஜேவர்தன, புத்தாண்டைக் கொண்டாட மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.